ஒரே அறைக்குள் இரண்டு கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ள சம்பவம் கோவை மாநகராட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி 66 வார்டு அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொதுக் கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பறையில் ஒரே அறையில் இரண்டு கழிப்பிடங்கள் கட்டப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் நேற்று வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அந்த அறை கதவு கூட இல்லாமல் திறந்து இருந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த புகைப்படம் வெளியாகி வைரலான நிலையில் இதுதொடர்பாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
அதில், சிறுவர்கள் பயன்படுத்துவதற்காகவே இந்த கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், சிறுவர்கள் உள்ளே சென்று தாழிட்டு கொள்ளக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக இவ்வாறு கதவு இல்லாமல் அமைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களின் விளக்கம் ஒருபுறம் இருந்தாலும் சிறுவர்கள் என்றால் இப்படி அருகருகே கழிப்பிடங்கள் அமைப்பது தான் சுகாதாரமானதா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.