Skip to main content

காவலராக பணிபுரியும் தந்தை மீது 10 வயது மற்றும் 15 வயது நிரம்பிய இரு மகன்கள் புகார்.

Published on 27/06/2018 | Edited on 27/06/2018
police

 

கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் இளங்கோ. இவருடைய மனைவியும் பேரூர் பகுதியில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.  இவர்களுக்கு ப்ரத்யூம்னா ( 15 ) மற்றும் ஹேமந்தரா ( 10 ) என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் போத்தனூர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் , தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட தந்தை செய்து கொடுக்க மறுப்பதாகவும் , சரியாக வீட்டிற்கு வராமலும் , குடும்பத்தை கவனிக்காமலும் இருப்பதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரு மகன்கள் வந்து புகார் மனு கொடுத்தனர். 

 

தந்தையின் இச்செயல்களால் என்னுடைய மனமும் , தனது தம்பியும் மனமும் மிகவும் பாதிக்கப்படைந்துள்ளதாகவும் , இதனால் படிப்பில் தங்களால் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்ட போது , புகார் மனு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இது குறித்து இளங்கோவிடம் விளக்கம் பெற பல முறை முயற்சி செய்யப்பட்டது , ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.காவல் பணியில் ஏற்பட்ட வேலை பளு காரணமாகவும் இருக்கலாம் இப்படி அவர் இருந்திருக்கலாம் எனவும் அவரை சேர்ந்த உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்