Skip to main content

பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் பலி! நீலம் பண்பாட்டுமையம் கண்டனம்!

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

நாகை காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த மாதவன், சக்திவேல் ஆகியோர் நாகை நகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நாகை நம்பியார் நகர் அரசு அலுவலர்கள் சுனாமி குடியிருப்பு அருகே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து நகராட்சி ஓட்டுநர் உதவியுடன் மாதவன், சக்திவேல், வண்டி பேட்டையை சேர்ந்த சந்தீப் ஆகிய மூவரும் சென்று பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

 

Two people passed away by poison gas attack while cleaning sewer

 

அப்போது பாதாள சாக்கடை உள்ளே இறங்கி வேலை செய்த சந்தீப்க்கு விஷவாயு தாக்கி மூச்சு திணறல் ஏற்படவே சாக்கடை உள்ளே இறங்கிய மாதவன், சக்திவேல் ஆகிய இருவரும் சந்தீப்பை காப்பாற்றி மேலே ஏற்றியுள்ளனர். அதனைத்தொடர்ந்து விஷவாயு தாக்கியதால் சக்திவேல் மாதவன் ஆகிய இருவரும் மேலே ஏற முடியாமல் உள்ளேயே சிக்கி மயக்கம் அடைந்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நாகை தீயணைப்புவீரர்கள் மற்றும் காவல்துறையினர் விஷவாயு தாக்கிய மாதவன், சக்திவேல் ஆகியோரை மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே அதிகாரிகளின் அலட்சியத்தால் இரண்டு தொழிலாளர்களும் உயிரிழந்ததாக கூறி நாகை அரசு தலைமை மருத்துவமனையில் திரண்ட உறவினர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வெளிப்பாலையம் போலீசார் உயிரிழப்புக்கு காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Two people passed away by poison gas attack while cleaning sewer

 

இதன் தொடர்பாக பேசிய நீலம் பண்பாட்டுமையம் கூறுகையில், தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்துக்கொண்டே வருகிறது. இதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை இந்த அரசு எடுத்ததில்லை, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என்று மார்தட்டிக்கொள்ளும் அரசு ஒரு துப்புரவு தொழிலாளிகளுக்கு ஏன் செய்ய மறுக்கிறது. நாகை நகராட்சி ஆணையாளரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றனர். 

 

சார்ந்த செய்திகள்