Skip to main content

நெடுவாசல் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராடிய வழக்கில் இருவர் ஆஜராக விலக்கு!!

Published on 17/10/2018 | Edited on 17/10/2018

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ந் தேதி மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதனால் அடுத்த நாள் காலை நெடுவாசல் கடைவீதியில் கையெழுத்து இயக்கம், ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கிய போராட்டம் காட்டுத்தீயாக பற்றி தமிழகம் மட்டுமின்றி கடல் கடந்தும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் கல்லூரி பள்ளி மாணவர்கள், அனைத்து கட்சிகள், திரைதுறையினர் சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் கலந்து கொண்டு ஆதரவை தெரிவித்தனர். இதனால் போராட்டம் அதிகரித்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி திட்டம் செயல்படுத்தப்படாது என்று ஒப்புதல் அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

 

 Two cases are appealing in the case against Nithuvasal Hydrocarbon in Keeramangalam.

 

அதே நேரத்தில் கீரமங்கலம், வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கருக்காகுறிச்சி, ஆலங்குடி போன்ற பல பகுதிகளிலும் இளைஞர்கள், விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இதில் கீரமங்கலத்தில் துரைப்பாண்டியன் தலைமையில் 7 பேர் மீதும், வடகாடு காவல் நிலையத்தில் வடகாட்டில் போராடிய ராஜகுமாரன் தலைமையில் 9 பேர்கள் மீதும், நல்லாண்டார்கொல்லையில் 4 பேர்கள் மீதும் ஆலங்குடியில் போராட்டம் நடத்திய வாலிபர் சங்க தோழர்கள் 40 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு வருடத்திற்கு பிறகு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் வடகாடு காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் உள்ளவர்களுக்கு சம்மன் கிடைக்கப்பெறவில்லை. அதனால் அவர்கள் 13 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆனால் ஆலங்குடியில் 40 பேரும்,  கீரமங்கலத்தில் இருந்து 7 பேரும் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர். 

 

 

இந்த நிலையில் இன்று திங்கள் கிழமை கீரமங்கலத்தில் போராட்டம் நடத்திய துரைப்பாண்டியன் உள்ளிட்ட 7 பேரும் ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது.. 7 பேரில் இருவர் முகவரிகள் தவறாக உள்ளதாக கடந்த வாய்தாவில் மனு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த மனு பற்றிய விசாரணை செய்த நீதிபதி.. சம்மனில் உள்ள பெயர்களில் என்ன தவறு உள்ளது என்று விசாரணை நடத்தினார் அப்போது.. சேந்தன்குடி கண்ணன்.. எனது தந்தை பெயர் தங்கச்சாமி ஆனால் சம்மனில் தங்கையா என்று உள்ளது என்றார். அதே பொல கீரமங்கலம் குமார் என்பவர் எனது தந்தை பெயர் அய்யாவு ஆனால் ராமசாமி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. என்றனர்.

 

தவறாக உள்ள நிலையில் ஏன் ஆஜராக வேண்டும். அதனால் உங்களுக்கு சரியான முகவரியுடன் சம்மன் வந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜரானால் போதும். அதுவரை வாய்தாக்களில் ஆஜராக வேண்டாம் என்று நீதிபதி கூறியுள்ளார். இதனால் இருவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்