Skip to main content

சிதம்பரம் அருகே முதலை கடித்து இருவர் மருத்துவமனையில் அனுமதி!

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

Two admitted to hospital after being bitten by a crocodile near Chidambaram

 

சிதம்பரம் அருகே முதலை கடித்து 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெறும் 2 பேரிடமும் வனத்துறை அதிகாரிகள் ஆறுதல் கூறி விசாரணை செய்தனர்.

 

சிதம்பரம் அருகே கிள்ளையை அடுத்துள்ள பனங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் இராமதுரை மகன் இராஜீவ்காந்தி (35). விவசாயியான இவர் திங்கள்கிழமை மதியம் அதே பகுதியில் உள்ள வாய்க்காலில் முகம் கழுவியுள்ளார். அப்போது வாய்க்காலில் இருந்து முதலை அவரது முகத்தைக் கடித்துள்ளது. இதனால் ராஜீவ்காந்தி அலறியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சிதம்பரம் வனத்துறைக்குப் பொதுமக்கள் தகவலும் தந்தனர். கடலூர் மாவட்ட  வன அலுவலர் செல்வம் உத்தரவின் போரில் சிதம்பரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வனவர் அஜிதா, வனப் பணியாளர்கள் புஷ்பராஷ், அமுதப்பிரியன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று வாய்க்காலில் இருந்த 4 அடி நீளமும் 50 கிலோ எடை கொண்ட குட்டி முதலையைப் பிடித்து வக்காரமாரி குளத்தில் விட்டனர்.

 

Two admitted to hospital after being bitten by a crocodile near Chidambaram

 

அதேபோல் குமாட்சி அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் மாரியப்பன்(48) விவசாயியான இவர் திங்கட்கிழமை மாலை கிராமத்துக்குப் பின் பகுதியில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது முதலை ஒன்று அவரது வயிறு மற்றும் வலது தொடைப் பகுதிகளில் கடித்துள்ளது. மாரியப்பன் வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு கிராமத்தில் இருந்து பொதுமக்கள் அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தநிலையில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலை கடித்துச் சேர்க்கப்பட்டிருந்த பனக்காடுக் கிராமத்தைச் சேர்ந்த இராஜீவ்காந்தி, தவர்த்தாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் ஆகியோரிடம் சிதம்பரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி விசாரணை  செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்