சிபிஐ இயக்குநர் சார்பில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், துப்பாக்கிச்சூடு நாளன்று நடைபெற்ற நிகழ்வுகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, ஜூன் 30 வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும் என கேட்கப்பட்டிருந்தது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, இதுவரை இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இன்னும் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்ய வேண்டியுள்ளது என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது சி.பி.ஐ விசாரணை தொடர்பாக குறிப்பிட்ட கால அவகாசம் நிர்ணயம் செய்ய முடியாது என பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த வழக்கிலும் விசாரணை முடிப்பதற்கு கால அவகாசம் நிர்ணயம் செய்யமுடியாது என்று குறிப்பிட்டனர்.
சி.பி.ஐ. தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை செப்டம்பர் 15ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.