Published on 15/01/2019 | Edited on 15/01/2019

மதுபாட்டில்களை கடத்திவந்த கும்பலை பிடிக்க முயன்றபோது நாகை மயிலாடுதுறை பாலையூர் காவல் ஆய்வாளர் நாகலட்சுமியை காரை ஏற்றி கொல்ல முயற்சி செய்துள்ளது மது கடத்தல் கும்பல்.
ஆய்வாளர் நாகலட்சுமி மீது மோதுவது போல் சென்ற கார் மற்றொரு வாகனத்தில் மோதி விபத்தில் சிக்கியது. உடனே போலீசார் சமபந்தப்பட்ட காரை கைப்பற்றினர். மதுபாட்டில்களை கடத்தி வந்த பவுன்ராஜ் விக்னேஷை போலீசார் கைது செய்தனர். அவர்கடமிருந்து 108 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.