திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகதாசி விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று மாலை திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. ரத்தின நீள் முடி கிரீடத்துடன் நம்பெருமாள் பக்தர்களுக்கு அர்ஜுன மண்டபத்தில் காட்சி தந்தார். முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் விழாவைப் பார்க்க வருகை தருவார்கள் என்பதால் ஆலயத்தில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளைக் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
பொது மக்களின் பாதுகாப்பு கருதி ஆலயத்தின் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரத்தில் சுமார் 292 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கார்த்திகை கோபுரம் முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக கொரோனா கட்டுப்பாட்டால் குறைவான பக்தர்களே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் கொரோனாவின் தளர்வுகள் முழுவதும் நீக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.