Skip to main content

ஜொள்ளு இன்ஸ்பெக்டருக்கு கட்டாய பணி ஓய்வு கொடுத்து அதிர்ச்சி கொடுத்த டிஐஜி!

Published on 08/07/2020 | Edited on 08/07/2020
police

 

திருச்சி மாவட்ட பெண்களிடம் ஜொள்ளு விடும் இன்ஸ்பெக்டர் ஒருவரை கட்டாய பணி ஓய்வுக்கு அனுப்பி உத்தரவிட்டது போலிஸ் வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சிறுகனூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர் மணிவண்ணன். இவர் இதற்கு முன்பு பணிபுரிந்த காவல்நிலையங்களில் எல்லாம் புகார் கொடுக்க வரும் பெண்களை எல்லாம் நள்ளிரவு நேரத்தில் அல்லது தனியே சென்று விசாரணை என்கிற பெயரில் ஜொள்ளுவிடுவது இவரது வாடிக்கை, இது குறித்து அவர் மீது புகார்கள் காவல்துறை மேலிடத்திற்கு சென்று கொண்டே இருந்தது.

இந்த நிலையில், போலிஸ் காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் போலிசாரிடம் எல்லாம் அநாகரீகமாக பேசுவதாக அதிகாரிகளுக்கு வாய்மொழியாக புகார் அளித்துள்ளனர். 

எப்போதும் காவல்நிலையத்தில், பஞ்சாயத்து, ஊரடங்கு காலங்களில் பிடிபட்ட  வாகனங்களை விடுவதற்கு பணம், தொடர்ச்சியாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொண்டே வருவது என எப்போதும் சர்ச்சை இஸ்பெக்டராகவே வலம் வந்திருக்கிறார்.

திருச்சி பொன்மலையில் இன்ஸ்பெக்டராக இருந்தபோது, பாரதிதாசன் பல்கலைகழகத்தில் பி.எச்.டி. படிக்க வந்த இலங்கை பெண்ணின் விசா சம்மந்தமான பிரச்சனையில் நேரடியாக வீட்டிற்கு சென்று தவறாக நடக்க முயற்சி செய்தது பெரிய பிரச்சனையாக மாறியது. (இது குறித்து நக்கீரன் இதழில் விரிவான கட்டுரை வெளியானது.) இதன் பிறகு பெரம்பலூர் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். 

பெரம்பலூரில் பணியாற்றியபோது, அங்கு புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் நள்ளிரவு 12 மணிக்கு செல்போனில் அழைத்து தொடர்ச்சியாக விசாரணை என்கிற பெயரில் பேசியதும் பயந்துபோன அந்த பெண், அப்போதைய டிஐஜி பாலகிருஷ்ணனிடம் புகார் கொடுத்திருக்கிறார். 

மணிவண்ணன் குறித்து விசாரிக்க சொல்லி டிஐஜி உத்தரவிட, விசாரணையின் முடிவில் அவர் பணிகாலங்களில் தொடர்ச்சியாக இது போன்ற புகார்கள் இருப்பதை தெரிந்த டிஐஜி, உடனடியாக அவரை கட்டாய பணி ஓய்வு பெற உத்தரவிட்டார்.

உத்தரவு நகல் கொடுப்பதை அறிந்த இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் காவல்நிலையத்திற்கு வருவதை தவிர்த்து வந்தார். ஒரு வாரம் கழித்து அவருக்கு நேரடியாக கட்டாய பணி ஓய்வு உத்தரவு நகல் வழங்கப்பட்டது. 

கட்டாய ஓய்வு கொடுத்து உத்தரவு போட்ட டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், கடந்த 30ம் தேதி தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டதில் சென்னைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்