ட்ராவல்ஸ் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 12 ரவுடிகள் கைது
புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருணாநகர் அருகே முந்திரி தோப்பில் பதுங்கி இருந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களை விசாரித்ததில் அவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கில் பதுங்கி இருத்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து 3 கத்தி, 2 இரும்பு பைப்பு, 3 இருசக்கர வாகனம், 4 செல்போன் ஆகியவையை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
இதேபோன்று புதுச்சேரி மூலக்குளம் சிவசக்தி நகரை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் செந்தில்குமாரை சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போணில் ரவுடிகள் மிரட்டி உள்ளனர். செந்தில்குமாரிடம் அவர்கள் ரூ 20 ஆயிரம் பணமும், மாதா மாதம் ரூ 5 ஆயிரம் மாமுல் தரவேண்டும் என்று மிரட்டினர்.
இதுகுறித்து செந்தில்குமார் ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கொடுத்த தகவலின் பேரில் 20 ஆயிரம் பணத்துடன் அவர்கள் வரச்சொன்ன இடத்திற்கு செல்ல வைத்து, அங்குவந் 3 பேர் செந்தில்குமாரிடம் பணத்தை வாங்கும்போது போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். இதேபோன்று பல்வேறு கோவில்களில் பணம் மற்றும் பொருட்களை திருடிய 3 பேரை கைது செய்தனர்.
-சுந்தரபாண்டியன்