Published on 18/01/2019 | Edited on 18/01/2019

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் காணும் பொங்கல் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சுற்றுலா தளங்களில் மக்கள் குடும்பத்தோடு கூட்டமாக வந்து கொண்டாடினார்கள். இதில் சர்வதேச சுற்றுலா தளமான குமரியில் அதேபோல் முட்டம் கடற்கரையிலும் மக்கள் குவிந்தனர்.
இவர்கள் கடற்கரையில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மேலும் வீட்டில் சமைத்து கொண்டு வந்த உணவுகளையும் கூட்டமாக உட்கார்ந்து ஒருவருக்கொருவர் பரிமாறி உண்டு மகிழ்ந்தனர்.
மக்கள் கூடுவார்கள் என்பதற்காக முன்கூட்டியே போலீசார் பாதுகாப்புக் காரணங்களுக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இதைப்போல் பத்மனாபபுரத்தில் உள்ள கேரளா அரசுக்கு சொந்தமான அரண்மனையிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.