பொங்கல் பரிசுத்தொகுப்பை வீட்டிலிருந்து 'பை' களைக் கொண்டு வந்து பெற்று செல்லலாம் என்று அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, பைகளின்றிப் பரிசுத் தொகுப்பை வாங்குவோருக்கு தனியே டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இதுவரை 45.1% பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக, பைகள் தைக்கும் பணியில் சில இடங்களில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சில பகுதிகளுக்கு முழுமையாக பைகள் வந்து சேராமல் பொங்கல் தொகுப்பை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பைகள் முழுமையாகக் கிடைக்காத பகுதிகளில், பைகள் இன்றி 20 பொருள்களைப் பெற்றுக் கொள்ள விரும்புவோருக்கு பரிசுத் தொகுப்பை வழங்கவும், அவர்களுக்கு பின்னர் பைகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறு வாங்குவோர், வாங்க தனியே டோக்கன் வழங்கப்படும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.