Skip to main content

தூத்துக்குடியில் இன்று உள்ளூர் விடுமுறை

Published on 05/08/2017 | Edited on 05/08/2017
தூத்துக்குடியில் இன்று உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 10ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, இன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற தூத்துக்குடி, தூய பனிமய மாதா பேராலய விழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில் 10-ம் நாள் திருவிழாவான இன்று, தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். திருவிழாவை முன்னிட்டு, மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சார்ந்த செய்திகள்