Skip to main content

விதிகளை மாற்றும்படி டிஎன்பிஎஸ்சி-க்கு கொரியா தமிழ்ச்சங்கம் கோரிக்கை!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020


வெளிநாடுகளில் வேலை செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் பணி தேர்வைணையம் கேட்டுள்ள சான்றிதழ் விவரங்கள் தேவையற்ற கால விரையத்தை ஏற்படுத்துவதாக கொரியா தமிழ்ச்சங்கத் தலைவர் இராமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக தலைமைக்கழக பேச்சாளர் ஆவடி குமார், திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சிபிஐ தேசிய செயற்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குமரகுரு, மதிமுக பொதுக்குழு உறுப்பினர் காரை.செல்வராஜ் ஆகியோரிடம் அவர் விரிவாகப் பேசினார்.
 

 

tnpsc korea tamil association request


அந்த உரையாடல் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு ஆசிரியர் பணி தேர்வாணையத்தால் (Tamilnadu Teachers Recruitment Board TRB) உதவி பேராசிரியர் மற்றும் தொடர்பான பணிகளுக்கான விண்ணப்பத்தில் வெளிநாட்டில் வேலைபார்த்த/பார்க்கும் விண்ணப்பதாரர்களுக்கு கேட்கப் பட்டிருக்கும் பணிபட்டறிவிற்கான சான்றிதழ் (Experience Certificate) மற்றும் தொடர்பான தேவைப்பாடுகள் உள்ளிட்டவைகளால் அதீத படிவ வேலை, வேலைநேர விரயம் மற்றும் பண விரயம் ஆகியவற்றால் பல்வேறு இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. 
 

http://onelink.to/nknapp


இத்தகைய இடர்ப்பாடுகள் கொரியா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியறிவு பெற்ற நமது இளைஞர்களை, களைப்படைய செய்து நாட்டில் மூளை வறட்சிக்கு வழிவகுக்கிறது. தற்போது குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப விதிமுறைப்படி வேலைசெய்த ஒவ்வொரு நிறுவனத்தின் தலைவரிடமும் ஆங்கிலத்தில் பெறப்படும் சான்றிதழை நோட்டரி பப்ளிக் கையொப்பத்திற்கு (Notarization at Law Firm) உள்ளூர் மொழியில் மாற்றம் செய்து, பின்னர் அப்போஸ்டைல் (Apostille) மற்றும் தூதரக ஒப்பம் (Attestation at Embassy) பெறுவது போன்ற அதீத வேலைப்பாடுகள் தேவைப்படுகிறது. 
 

tnpsc korea tamil association request


இன்று சான்றிதழின் உண்மைத்தன்மையையை நேரடியாகச் சரிபார்க்க பல தொடர்பு வழிகள் இருக்கும் நிலையில் பணிசெய்த ஆய்வுக்குழுவின் தலைவர் மற்றும் ஆய்வுத்துறையின் இயக்குனர் ஆகியோரின் சான்றொப்பத்துடன் கூடிய பட்டறிவு சான்றிதழ் என்ற அளவில் எளிமைப்படுத்தினால் நல்லது. எனவே, எதிர்காலத்தில் கூடியவரை படிவ வேலைகளை எளிமைப்படுத்தி இடர்ப்பாடுகளை களைய உரிய உதவிகளைச் செய்ய வேண்டும்” என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டதாக தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

‘அரசுப் பணிக்கு 394 பேர் தேர்வு’ - டி.என்.பி.எஸ்.சி.  அறிவிப்பு!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
394 Candidates Selected for Govt Jobs says tnpsc

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப 394 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ச. கோபால சுந்தர ராஜ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 16.02.2024 முதல் 07.03.2024 வரையிலான காலத்தில் இளநிலை வரைதொழில் அலுவலர் (நெடுஞ்சாலைத் துறை) பதவிக்கு 219 நபர்களும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (தொகுதி- II) பணிகளில் அடங்கிய இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார்பதிவாளர் நிலை - II, சிறப்பு உதவியாளர், தனிப் பிரிவு உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு 112 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இளநிலை அறிவியல் அலுவலர் (தடயவியல் துறை) பதவிக்கு 29 நபர்களும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 394 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.