Skip to main content

தேர்தலுக்கு பிறகு ஊரடங்கா? - நம்பாதீர்கள்: ராதாகிருஷ்ணன் பேட்டி! 

Published on 05/04/2021 | Edited on 05/04/2021

 

tn health secretary pressmeet at chennai

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (06/04/2021) நடைபெற உள்ள நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், "வாக்காளர்கள் நாளை முகக்கவசம் அணிந்துதான் வாக்களிக்க வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். வாக்குச்சாவடிகளில் முகக்கவசம் தருவார்கள் என்று வரக்கூடாது. தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படும். தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரிக்கிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்களிக்கும் கரோனா நோயாளிகளுக்கு பிபிஇ கிட் வழங்கப்படும்.

 

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஃபேஸ் ஷீல்டு வழங்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசிப் போட்டுக்கொண்டவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டுப்பாட்டு பகுதிகளில் ஏப்ரல் 7ஆம் தேதிக்குப் பிறகு வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்யப்படும். 54 லட்சம் கரோனா தடுப்பூசி நம்மிடம் இருந்தாலும், தினமும் 15 ஆயிரம் பேர்தான் தடுப்பூசி போடுகின்றனர். மஹாராஷ்ட்ராவை போன்று தமிழகத்தில் கரோனா பரவாமல் இருக்க  மக்கள் ஒத்துழைக்க வேண்டும். 

 

தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு என பரவும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம். காய்ச்சல் வந்தால் தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும்" இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலாளர் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்