Skip to main content

தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு!

Published on 14/05/2021 | Edited on 14/05/2021

 

private ambulance vehicles fee fixed tn government announced

 

நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு அறிவித்தது .

 

இது தொடர்பான அரசின் அறிவிப்பில், "ஆக்சிஜன் வசதியின்றி நோயாளிகளை அழைத்துச் செல்ல முதல் 10 கி.மீ.க்கு ரூபாய் 1,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 கி.மீ.க்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கும் கூடுதலாக ரூபாய் 25 வசூலித்துக்கொள்ளலாம். ஆக்சிஜன் வசதியுடன் அழைத்துச் செல்ல முதல் 10 கி.மீ.க்கு ரூபாய் 2,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜனுடன் அழைத்துச் செல்லும்போது கூடுதலாகும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூபாய் 25 வசூலித்துக்கொள்ளலாம். வெண்டிலேட்டர் வசதியுடன் அழைத்துச் சென்றால், முதல் 10 கி.மீ.க்கு ரூபாய் 4,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெண்டிலேட்டருடன் அழைத்துச் செல்லும்போது கூடுதலாகும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூபாய் 100 வசூலிக்கலாம். தனியார் ஆம்புலன்ஸ்களில் கரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூல் என புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்