Published on 07/02/2021 | Edited on 07/02/2021

தமிழகத்தில் வரயிருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி என தொடர்ந்து இயங்கி வருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்த நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது. கூட்டணி தொடர்வதற்கான அறிவிப்புகளை ஒவ்வொரு மேடைகளிலும் அக்கட்சித் தலைவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ''பாஜகவிற்கு அதிக இடங்களை கேட்டு அழுத்தம் கொடுக்காமல், குழப்பமின்றி இடங்களை கேட்டுப் பெறுவோம் '' என தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ''மீண்டும் பழனிசாமி ஆட்சிக்கு கொண்டுவர வேண்டுமென்பதே முடிவு'' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.