ஆட்சிக்கு வந்து பிரச்சனைகள் தீர்க்கப்படாவிடில் முதல்வர் அறைக்கு வந்தே கேள்வி கேட்கலாம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், பட்டம்புதூரில் நடந்த 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "தி.மு.க. ஆட்சிக்கு வந்து பிரச்சனைகள் தீர்க்கப்படாவிடில் முதல்வர் அறைக்கு வந்தே கேள்வி கேட்கலாம். உள்ளாட்சியில் நல்லாட்சி எனப் பெயர் பெற்றவர் நான்; ஆனால் தற்போதைய அமைச்சர்? அ.தி.மு.க.வின் அரசு மக்களுக்கான ஆட்சி அல்ல, டெண்டர்களுக்கான ஆட்சி. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முறைகேடான டெண்டர் பற்றி விசாரணை நடத்தப்படும். இதுவரை நடந்த தேர்தல்களிலேயே தகுதியே இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜேந்திர பாலாஜி. விவசாயிகள் படும் கஷ்டம் தேர்தல் வரும்போது தான் முதலமைச்சருக்கு தெரிந்ததா? பட்டியல் இனத்தவர்களுக்கு இதுவரை எந்தவித பயனும் சென்றடையவில்லை" எனக் குற்றம்சாட்டியுள்ளார்.