புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியில் குடிநீர் கேட்டு மாவட்ட ஆட்சியரை அப்பகுதி பெண்கள் முற்றுக்கை
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட திருவப்பூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் கடந்த 2 வருடமாக குடிநீர் விநியோகம் சரிவர வழங்கபடவில்லை என பல முறை நகராட்சி அலுவலகத்தில் மனுகொடுத்தும் நேரில் கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர் அப்பகுதி பெண்கள்.
இந்நிலையில் நேற்று திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சுதந்திர தின விழாவினை முன்னிட்டு சமபந்தி சிறப்பு விருந்துக்கு வந்தபோது அப்பகுதி ஏரலாமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் கனேஷ்; அவர்களை அப்பகுதிக்கு குடிநீர் கேட்டு முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இந்த முற்றுகையினால் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
-இரா. பகத்சிங்