திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா வரும் நவம்பர் 20- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பர் 29- ஆம் தேதி திருவண்ணாமலை தீபத்திருவிழா அன்று கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நவம்பர் 29- ஆம் தேதி காலை 04.00 மணிக்கு கோயிலுக்குள் பரணி தீபமும், மாலை 06.00 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத்திருவிழா அன்று மலை மீது பக்தர்கள் செல்லவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்படுகிறது. கரோனா பரவல் காரணமாக சாமி வீதியுலா நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயிலில் வழிபாடு நடத்த நாள் ஒன்றுக்கு 5,000 பேருக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதிப்படுவர். டி.வி.யில் திருவண்ணாமலை தீபத்திருவிழாவை பக்தர்கள் கண்டுகளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.