Skip to main content

திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளர் மாற்றம் - டிடிவி அறிவிப்பு!

Published on 23/08/2017 | Edited on 23/08/2017
திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளர் மாற்றம் - டிடிவி அறிவிப்பு!

அம்மா அணி சார்பில் திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளராக பொன்னேரி எம்.எல்.ஏ பலராமன் இருந்து வந்தார். ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணிகள் இணைந்ததை தொடர்ந்து, டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான பூந்தமல்லி எம்.எல்.ஏ ஏழுமலையை தற்போது அம்மா அணியின் மேற்கு மாவட்ட செயலாளராக நியமித்து டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து எழுமைலையின் ஆதரவாளர்கள் திருவள்ளுர் மீரா தியேட்டர் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதனிடையே அதிமுக மாவட்ட செயலாளர் யார் என்ற கடும் குழப்பம் திருவள்ளுர் மாவட்ட அதிமுகவினரிடேயே ஏற்பட்டுள்ளது.

- தேவேந்திரன்

சார்ந்த செய்திகள்