Skip to main content

குடும்பத்துடன் திருப்பதி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

Published on 02/10/2017 | Edited on 02/10/2017
குடும்பத்துடன் திருப்பதி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆந்திர மாநிலம் திருமலை–திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் சாலை வழியாக புறப்பட்டு செல்கிறார். 

இவர்கள் இன்று இரவு திருமலையில் உள்ள முக்கிய விருந்தினர் தங்கும் விருந்தினர் மாளிகையில் தங்குகின்றனர். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணிக்கு பிரேக் தரிசனம் முறையில் சாமி தரிசனம் செய்கின்றனர். பின்னர் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பகலில் திருமலையில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார்.

முதல்–அமைச்சரின் மனைவி பி.ராதா, மகன் பி.மிதுன் மற்றும் ஜெ.சரண், உறவினர்கள் மாணிக்கம், எம்.சுசீலா மற்றும் முதல்–அமைச்சரின் உதவியாளர் எஸ்.கிரிதரன், பாதுகாப்பு அதிகாரி தர்மராஜ், பாதுகாவலர் என்.எஸ்.ரெட்டி, போலீஸ் கண்காணிப்பாளர் (பாதுகாப்பு) ஜி.ராமர், துணைகண்காணிப்பாளர் (பாதுகாப்பு) சி.ராஜா ஆகிய 11 பேர் திருப்பதி செல்கின்றனர்.

சார்ந்த செய்திகள்