Skip to main content

மேகதாது விவகாரம் - இன்று மத்திய அமைச்சரை சந்திக்கும் துரைமுருகன்!

Published on 06/07/2021 | Edited on 06/07/2021
jk

 

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துவருகிறது. இதற்கிடையே அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழ்நாடு அரசுக்கு சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார். கர்நாடக முதல்வர் எழுதிய கடிதத்திற்குப் பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், "மேகதாது அணை கட்டும் முடிவைக் கர்நாடக அரசு கைவிட வேண்டும்'' என வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய அமைச்சரிடம் பேச தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (05.07.2021) டெல்லி சென்றார். இன்று காலை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தை சந்திக்கும் அவர், காவிரி நீர், மேகதாது அணை விவகாரம், தென்பெண்ணை குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை ஆகியவை பற்றி மத்திய அமைச்சருடன் பேச இருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்