Skip to main content

மூன்று மாத கர்ப்பிணி மரணத்தில் திருப்பம்!

Published on 22/09/2019 | Edited on 22/09/2019

வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரம் பைரவா காலனி பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி செல்வா. இவரின் மனைவி 19 வயதான தனலட்சுமி. இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. தனலட்சுமி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் செப்டம்பர் 18ந்தேதி காலை வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டார். இந்த தகவலை அறிந்த ராணிப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் தனலட்சுமியின் கணவர் செல்வாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. எதனால் தற்கொலை செய்துக்கொண்டான்னு எனக்கு தெரியாது எனச்சொன்னதாக தெரிகிறது.

incident


பிறகு உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தற்கொலை வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்த துவங்கினர். அதேபோல், திருமணம் முடிந்து 3 ஆண்டுக்குள் அந்த பெண் இறந்தார் என்றால் அதுப்பற்றி கோட்டாச்சியர் அல்லது உதவி ஆட்சியர் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது சட்டம். அதன்படி இந்த பெண்ணின் இறப்பு குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தற்கொலை செய்துக்கொண்டதாக சொல்லப்பட்ட தனலட்சுமியின் கணவர் செல்வா, ராணிப்பேட்டை காவல்நிலையத்தில் செப்டம்பர் 21ந்தேதி மதியம் தானாக முன்வந்து சரணடைந்தார். மேலும்  ஒரு வாக்குமூலத்தை தந்துள்ளார். அதில், வாழ்க்கை நடத்த பணம் கேட்டதால், குடிபோதையில் இருந்த நான் என் மனைவியை போட்டு அடித்து உதைத்தேன். அவளோடு உறவு கொண்ட போதும் சண்டை வந்தது. அவள் மீது எனக்கு சந்தேகம். அதோடு, இரவு உறங்கும் போது ஆடைகளை சரிசெய்யாமல் உறங்கினார்.


அதேபோல் உடைகளை சரிசெய்துக்கொண்டு தூங்கு என சண்டைப்போட்டேன். அவள் சரிச்செய்யாமல் தூங்கினால், இதனால் ஆத்திரம் அதிகமானது. அதனால் அவளை நான் தான் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். அவள் தற்கொலை செய்துக்கொண்டதாக நாடகமாடினேன் எனச்சொல்லியுள்ளான். அவன் சொல்லும் காரணங்கள் உண்மையா, எப்படி கொலை செய்தான் என தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கின்றனர்.


 

சார்ந்த செய்திகள்