திண்டுக்கல் முன்னாள சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்( சிபிஎம்) மாநில குழு உறுப்பினருமான செல்வி தோழர் க.பாலபாரதியிடம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கொடுத்த பேட்டியில்...
மார்ச் எட்டாம் தேதி உலக பெண்கள் தினம் என்பதால் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க இந்நாளில்தான் பெண்களுக்கு வாக்குரிமை, எட்டு மணிநேரவேலை இவைகள் உள்ளிட்ட உரிமைகளைப் பெறுவதற்கு பெண்கள் ஒருங்கிணைந்த நாளாகும், முதன்முதலில் சோவியத்ரஸ்யாவில் இந்த மார்ச் எட்டில் உழைக்கும்பெண்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டு நாளடைவில் உலகின் பலநாடுகளின் கவனத்தை இத்தினம் ஈர்த்தது.
சுறுசுறுப்பு, அர்ப்பணிப்பு, பொறுமை இவைகளை இயற்கையாகப் பெற்ற பெண்களின் உழைப்பை முதலாளித்துவ சமூக அமைப்புகள் தங்கள் நலனுக்காக பயன்படுத்திக்கொண்டதோடு பெண் கல்வி அவர்களுக்கான வேலை உரிமைகளை சலுகைகளாக வழங்கியது.
இந்தியாவின் சுதந்திரப்போரில் பஙகெடுத்து சிறை சென்றவர்கள், உயிர்தியாகம் செய்தவர்கள் பெண்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒன்று என்ற எண்ணிக்கையில்கூட சட்டம் இயற்றும் இடத்தில் அவர்கள் இல்லை. அரசியல்கட்சிகளிலும், அரசாங்க அமைப்புகளிலும் நீடித்துவரும் ஆணாதிக்கமே அதற்கு காரணமாக அமைந்துள்ளது.
33%இட ஒதுக்கீடு மசோதா சட்டமாக்கப்படாமல் 20ஆண்டுகளாக கிடப்பில்போடப்பட்டிருக்கிறது. இது மிகவும் வெட்ககரமானது. அவனிசதுர்வேதி இந்தியாவில் போர்விமானத்தை இயக்கிய முதல்பெண் என்ற பெருமையோடு பெண்ணால் முடியாதது ஏதுமில்லை என சாதித்திருக்கிறார். இருந்தும் சட்டமியற்றும் நிமிடங்களில் பெண்களைக் காணமுடியவில்லை என்பது துரதிருஷ்டம். இந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றாத பாஜகவை தோற்கடிக்கப்படுவதோடு இந்தியாவில் பெண்கள் வாழத்த தகுதியற்ற நாடாக இருந்து வருவதாக பல சம்பவங்களை சுட்டிக்காட்டுகிறேன். குழந்தைகள் மீதான பாலியல்வன்முறை அதிகரித்துவருகின்றன. இவைகளின் பின்னால் ஆளும் அரசின் பெண் விரோதப்போக்குகளும் உள்ளன.
பெண்ணை போகப்பொருளாக கருதும் நுகர்வுகலாச்சார சிந்தனையை தகர்த்தெறிந்து குடும்பம், அலுவலகம், அரசியல் என அனைத்திலும் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமமாக மதிக்கப்படுவதற்கும், அத்தகையநிலை சமூகத்தில் வளர்வதற்கும் இந்த மார்ச் எட்டாம் தேதி ஊத்வேகமூட்டுகிற நாளாக, ஆண்டாக அமைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.