












நாடு கடந்த தமிழீழ அரசாங்கக் கூட்டத்தை நடத்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெறவிருந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கக் கூட்டத்திற்கு கடைசி நிமிடங்களில் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால், மயிலாப்பூரில் உள்ள திராவிட விடுதலை கழக அலுவலகத்தில் நடைபெற்றது. 36 நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் இணையவழியாக இந்த கருத்தரங்கில் கலந்துக் கொண்டனர். 50- க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர் ஆதரவாளர்கள், நேரடியாகக் கலந்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ காணொளி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார்.
கூட்டம் முடிவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, அங்குச் சென்ற காவல்துறையினர் அனுமதிப் பெறவில்லை எனக் கூறி பங்கேற்பாளர்களை கைது செய்தனர். ஜனநாயக உரிமையை மறுத்து அராஜகத்தில் ஈடுபடுவதாக காவல்துறையைக் கண்டித்து, கைது செய்யப்பட்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.