Skip to main content

“சுதந்திர தினத்தை கருப்பு நாள் எனக் கூறியவர்கள்..” - ஆளுநர் ஆர்.என். ரவி

Published on 23/10/2023 | Edited on 23/10/2023

 

"Those who called Independence Day a black day.." - Governor R.N. Ravi

 

திருச்சியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனத்தில் இந்திய விடுதலை போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் நினைவு நாள் விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டார். 

 

இந்த விழாவில் பேசிய அவர், “பிரித்தாளும் கொள்கைக்காக அனுப்பப்பட்ட கால்டுவெல்லை திராவிட கருத்தியலின் தந்தை என்று போற்றுகிறார்கள். பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட ராபர்ட் கால்டுவெல் தான் திராவிடம் என்று பிரித்துக் கூறியவர். இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். தமிழ்நாடு புண்ணிய பூமி; இங்கு ஆரியம் திராவிடம் கிடையாது. சுதந்திர தினத்தை கருப்பு நாள் எனக் கூறியவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள்” என்றார். 

 

இந்த விழாவில் பேசியது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சமூகவலைதளப் பக்கமான எக்ஸில், “ஆளுநர் ரவி, மருதுசகோதரர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், ஆங்கிலேய திராவிட கதையை பரப்பும் அரசியல் சதியின் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தேசிய சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகள் ஜாதிய தலைவர்களாக சிறுமைப்படுத்தப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தார்” என பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்