Skip to main content

தூத்துக்குடியில் வன்முறையால் பெண்களை தொடர்ந்து அச்சுறுத்தும் போலீசார்: கனிமொழி ஆவேசம்!

Published on 12/06/2018 | Edited on 12/06/2018


தூத்துக்குடியில் போலீசார் வீடு வீடாக சென்று, அங்கு இருக்கும் பெண்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர் என திமுக எம்.பி., கனிமொழி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

உலக சந்தையில் பெட்ரோல் டீசல் விலை குறைவாக இருக்கும் போது விலையை ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை. குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபோது பெட்ரோல் விலை உயர்வு குறித்து கடுமையாக சாடினார். ஆனால், தற்போது இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு விலையை குறைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக மூடிவிட்டோம். அப்பகுதி இயல்பு நிலைக்கு திரும்புகிறது என்று தொடர்ந்து தமிழக அரசு கூறி வருகின்றது. ஆனால், தூத்துக்குடியில் போலீசார் வீடு வீடாக சென்று, அங்கு இருக்கும் பெண்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் அதை பாதுகாக்க வேண்டும் என்று போராடியவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய என்ன அவசியம் இருக்கிறது? தமிழகத்தில் தற்போது உள்ள அதிமுக அரசின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்