Skip to main content

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - விசாரணை காலம் நீட்டிப்பு

Published on 23/02/2022 | Edited on 23/02/2022

 

ஸ,.

 

கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22, 23 தேதிகளில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடி கடற்கரைச் சாலையிலுள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகிறார்.

 

இந்த ஆணையத்தின் சார்பில் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இடையில் தமிழ்நாட்டில் திமுக  ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், கடந்த மே 14ஆம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த இடைக்கால விசாரணை அறிக்கையை இந்த ஆணையம் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது. இந்த ஆணையம் தற்போது விசாரணையை நிறைவு செய்துள்ளது. 3 மாதத்தில் விசாரணை அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட இருப்பதாக ஒருநபர் விசாரணை கமிஷன் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகரன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். மேலும் அருணை ஜெகதீசன் ஆணையம் இதுவரை 1048 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் ஆணையத்தின் கால அளவு வரும் மே மாதம் 22ம் தேதி வரை நீட்டித்து தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்