தொண்டி கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக வெடிப்பொருட்கள் மரைன் போலீசாரிடம் பெருமளவில் சிக்க, எப்படி இங்கு வந்தது? எனும் ஆய்வில் மாவட்டப் போலீசார் கூடுதல் விசாரணையை தொடங்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கிழக்குக் கடற்கரையோர சாலையிலுள்ள கடற்கரை ஊரான தொண்டி. மீன்பிடித் தொழிலை மட்டுமே பிரதானமாக உள்ள இந்த ஊரில், இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைக்கும் வண்ணம் சில சமூக விரோத செயல்களும் நடக்கும்.
இது இப்படியிருக்க, ஞாயிறன்று தொண்டி பகுதியிலுள்ள மரைன் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, சந்தேகத்திற்கிடமாக கையில் பையுடன் சுற்றித்திரிந்த நபர் ஒருவரை பிடிக்க, அவரது கைப்பையில் "தடைசெய்யப்பட்ட 65 ஜெலட்டின் குச்சிகள், 44 டெட்டனேட்டர்கள் மற்றும் நான்கு மீட்டர் வயர் "உள்ளிட்டவைகள் இருக்க பொருட்களை கைப்பற்றியும், அந்த நபரையும் அழைத்து மரைன் போலீஸ் அலுவகத்திற்கு கொண்டு சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில், அவரது பெயர் வீரபத்திரன் எனவும், ஊர் புதுக்குடி பகுதி எனவும், மீன் பிடிப்பதற்காக இதனை வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தொண்டி கடற்கரை பகுதியில் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்து இருப்பது. இப்பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.