Skip to main content

“புகாரில் இருந்து தப்பிக்க 2 லட்ச ரூபாய்க்குள்ளவே திருடுவார்கள்” – நெடுஞ்சாலை கொள்ளையன் வாக்குமூலம்...

Published on 28/09/2019 | Edited on 28/09/2019

திருவண்ணாமலை மாவட்டத்தில் சென்னை டூ திண்டிவனம், திண்டிவனம் டூ பெங்களுரூ, சென்னை டூ சேலம் சாலையில் கண்டெய்னர் லாரிகளில் அடிக்கடி திருடு நடப்பது வாடிக்கையாக இருந்துள்ளது. இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலையில் ஒரு கண்டெய்னரில் இருந்து பிரபலமான தனியார் நிறுவனத்தின் கேஸ் ஸ்டவ் அடுப்புகள் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ளதை திருடியுள்ளார்கள்.
 

thiruvannamalai

 

 

இதுதொடர்பாக அந்த தனியார் நிறுவனம் கலசப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தியபோது, 5 பேர் கொண்ட கும்பலை ஏ.டி.எஸ்.பி அசோக்குமார், டி.எஸ்.பி குணசேகரன் தலைமையிலான டீம் கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கோட்டீஸ்வரன், சின்னராஜ், விஜயகுமார், ரியாஸ், கோயம்பத்தூரை சேர்ந்த பொன்ராஜ் ஆகியோரை கைது செய்துள்ளனர். இவர்கள் பயன்படுத்திய கண்டெய்னர் போன்ற சிறிய லாரிகள் இரண்டை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுப்பற்றி திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, நெடுஞ்சாலைகளில் விடியற்காலை நேரத்தில் கண் அசந்து கண்டெய்னர் வண்டிகள் சாலையோரம் வண்டியை நிறுத்திவிட்டு தூங்கும்போது, இவர்கள் பெரியது மற்றும் சிறியது என இரண்டு கண்டெய்னர் லாரிகளில் செல்வார்கள். நிற்கும் கண்டெய்னர் லாரியை ஒட்டினார்போல் பெரிய லாரியை நிறுத்திவிட்டு, சிறிய லாரியை கொண்டு சென்று பொருள் உள்ள கண்டெய்னர் அருகே நிறுத்தி, கண்டெய்னர் லாரி கதவை உடைத்து அதில் உள்ள பொருட்களை சிறிய கண்டெய்னர் லாரிக்கு மாற்றிக்கொண்டு போய்விடுவார்கள். இவர்களின் திருட்டின் மதிப்பு 2 லட்சத்துக்கு மேல் தாண்டாததால் பெரும்பாலும் புகார் பதிவாகவில்லை.

நம் மாவட்டத்தில் மட்டும் கலசப்பாக்கம், தானிப்பாடி, மேல்செங்கம் காவல்நிலையங்களில் கண்டெய்னர் லாரிகளில் திருடப்பட்டதாக 4 வழக்குகள் பதிவாகியுள்ளன. அந்த நான்கு திருட்டையும் இந்த கும்பல் தான் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. 11.5 லட்சத்துக்கு திருடு போன பொருட்களின் மதிப்பு என தெரியவந்துள்ளது.

இவர்கள் மீது கொள்ளை வழக்குகள் மட்டும்மே உள்ளன, கொலை போன்ற வழக்குகள் இதுவரை இருப்பதாக தெரியவில்லை. கோட்டீஸ்வரன் மீது 2012ல் வழக்கு பதிவாகி, கைதாகியுள்ளான், அதன்பின் அவன் எங்கும் சிக்காமல் இருந்தவன் தற்போது இங்கு சிக்கியுள்ளான் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்