கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் 1ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது. அன்று முதல் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று 10ந்தேதி காலை பரணி தீபமும், மாலை 06.00 மணிக்கு மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.
தீபத்தன்று கிரிவலம் வரவும், மலையேறி அண்ணாமலையார் பாதத்தை காணவும் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் நகருக்கு வருகை தந்துள்ளனர். கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் வருவது, மலையேறி கடவுளை பக்தர்கள் வேண்டுகின்றனர், தங்களது நேர்த்தி கடன்களை செலுத்துகின்றனர். மலையில் தீபம் ஏற்றுவதற்கு முக்கிய காரணம், அர்த்தநாரீஸ்வரர்.
அர்த்தநாதரீஸ்வரர் என்பர்?
கைலாயத்தில் சிவனும்- சக்தியையும் அமர்ந்திருந்தபோது, சிவபெருமானை காண பிருங்கி முனிவர் சிவனை சந்திக்கவந்தார். சிவனும் அனுமதிக்க, பிருங்கி முனிவர், சிவபெருமானை மட்டும் வணங்கினார், சக்தியை கண்டுக்கொள்ளவில்லை. இதனால் அதிருப்தியடைந்த சக்தி, பிருங்கி முனிவரிடம் என்னை வணங்காதது ஏன் என கேள்வி எழுப்பினர்.
இந்த உலகில் சிவன் ஒருவனே கடவுள். நான் அவரை மட்டுமே என பிருங்கி முனிவர் பதிலளித்தார். இந்த பதிலால் கோபமடைந்த சக்தி, இந்த சக்தியில்லையேல் சிவன் இல்லை என்றார். பிருங்கி முனிவர், சிவன் இல்லையேல் சக்தியில்லை என பதில் வாதம் வைத்தார். வாதம் ஒருக்கட்டத்தில் சக்தியின் அதீத கோபமானது. ஒருக்கட்டத்தில் பிருங்கி முனிவர் உடலில் ரத்தம், சதை நீங்கி எலும்பு கூடாக வலம் வரவேண்டும் என சாபமிட்டார் சக்தி. பிருங்கி முனிவரும் அப்படியே மாறினார். இதில் அதிர்ச்சியான சிவன், சிவனும் சக்தியும் வெவ்வேறல்ல என சக்திக்கு விளக்கினார். விளக்கத்துக்கு பின், அதை உலகத்துக்கு உணர்ந்த உங்கள் உடலில் எனக்கு பாதியை தாருங்கள் என சக்தி சிவனிடம் கேட்டார்.
பிருங்கி முனிவருக்கு நீ அளித்த தவறான சாபத்துக்கு, நீ என்னை பிரிந்து வாழ வேண்டும். இந்த பிரிவு காலத்தில் உன் வேண்டுக்கோள் நிறைவேற என்னை நோக்கி கடும் தவம் செய் எனச்சொல்லி பூலோகத்துக்கு அனுப்பினார். சக்தியும் கடும் தவம் புரிந்தார். அதன்பின் தனது உடலில் இடப்பாகத்தை தந்து சிவனும்- சக்தியும் ஒன்று என்றார். இந்த உருவத்துக்கு பெயர் அர்த்தநாரீஸ்வரர். அந்த உருவத்தை பெற்ற தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் என்கிறது புராணம்.
அந்த உருவத்தில் உலகத்துக்கு காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகாதீபத்தன்று மாலை 6 மணிக்கு அலங்காரத்துடன் கோயிலுக்குள் இருந்து வெளியே வருவார் அர்த்தநாரீஸ்வரர். அவர் வரும்போது கொடிமரத்தின் கீழே தீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். அதனை கண்டுவிட்டு அப்படியே கோயிலுக்குள் சென்றுவிடுவார். சரியாக அதிகபட்சம் 5 நிமிடங்களே அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு வெளியே வந்து காட்சியளிப்பார். வருடத்துக்கு ஒருமுறை மட்டும்மே இப்படி வெளியே வருவார்.
மலையை சிவன் என்கிற புரணாம். அந்த மலை உச்சியில் மகாதீபத்தன்று ஏற்றப்படும் தீப ஒளியாக மலையில் இருந்து காட்சியளிக்கும் கடவுளை தரிசித்தால் போதும் என்பது பெரும்பான்மை மக்களின் எண்ணம்.