திருச்சியை அடுத்த மணப்பாறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்த மாணவர் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்த நிலையில் பெற்றோர் திட்டியதால் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை செய்துகொண்ட மாணவனின் தாயார் கண்ணீர் மல்க செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''ரம்மி விளையாண்டு தோத்துப்போயிட்டேன்னு சொல்றான் சார்'' என அழுந்தார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் ''உங்களுக்கு எப்படியம்மா தெரியும் அவர் ரம்மி விளையாண்டதால் தற்கொலை செய்துகொண்டார் என்று'' என கேட்க, செல்லுல ஒரு பொண்ணுக்கு அனுப்பிச்சி விட்ருக்கான் சார் ரம்மி விளையாண்டு தோத்துப்போயிட்டேன், நெறய காசை விட்டுட்டேன்னு. என் பையன் நல்ல பையன் சார். அவன் அவ்வளவு வெவரம் தெரிஞ்ச பையனெல்லாம் இல்ல சார். அடிதடிக்கெல்லாம் போகமாட்டான். நகையை வீட்ல இருந்து எடுத்துடுப்போனான். கண்டிக்கலாம் இல்ல.. வாடா நகையை திரும்பிக்கலாம்னு தான் சொன்னோம். வீட்டுக்கு வரேன்னு தான சொன்ன எப்படிடா என்ன விட்டு போக மனசு வந்துச்சு'' என கண்ணீர் விட்டு அழுதார்.