திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் உள்ள 45 மதகுகளில் 7 மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிதிருந்தினர்.
இந்நிலையில் 8 மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அணையில் இருந்து 90,000 கன அடி நீர் வெளியேறி வருகிறது. இதனால், கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1836 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் முக்கொம்பு மேலணை கட்டப்பட்டது. முக்கொம்பு அணையை சரிபார்க்க இரண்டு ஆண்டுகள் முன்னதாக ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் ராணுவ பொறியாளரும், தென்னிந்திய நீர் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவருமான சர்.ஆர்தர் காட்டன் என்பவர், கரிகாலச் சோழனின் கட்டுமான முறையைப் பின்பற்றி 1834 -ம் ஆண்டு முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் பகுதியில் 45 மதகுகளுடன் அணைகட்டி நீரைச் சேமிக்க வழி வகுத்தார்.
6.3 மீட்டர் அகலம் கொண்ட இதன் மேல்பகுதி வழியாக வாத்தலை - முக்கொம்பு இடையே கார், இரு சக்கர வாகன போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 180 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து நின்று, டெல்டா மக்களின் வாழ்வதாரத்தை உயர்த்த துணை நின்ற இந்த அணையின் ஒரு பகுதி தற்போது 8 மதகுகள் உடைந்து விட்டது.