![The thief who accepted the woman's request and came back](http://image.nakkheeran.in/cdn/farfuture/i0hGUSBlOC0iEzFUlucYzx-i3F5jDbAWmXZCGFwtKEw/1626521216/sites/default/files/inline-images/theif_2.jpg)
குஜராத்தில் தன்னுடைய கணவருடன் வசித்து வரும் இளஞ்சியம் என்ற பெண்மணி ஸ்ரீரங்கம் பகுதியில் தற்காலிகமாக வசித்து வருகிறார். இவர் தன்னுடைய தோழியை பார்க்க எடமலைப்பட்டி புதூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றிருந்த நிலையில் இரவு 7 மணிக்கு தோழியை பார்த்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆற்றுப்பாலத்தில் இளஞ்சியம் வைத்திருந்த கைப்பையை பைக்கில் வந்த ஆசாமி பறித்துக் கொண்டு தப்பினார்.
செல்போனில் அழைத்தபோது மறுமுனையில் பேசிய மர்ம ஆசாமிகளிடம் தன்னுடைய செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு மட்டும் தரும்படி கேட்டுள்ளார். மர்ம ஆசாமியும் கைப்பையையே தருவதாக கூறினார். அதற்காக திருச்சி - சென்னை பைபாஸ் பால்பண்ணை அருகே வர சொன்னார். இளஞ்சியம் தனது தம்பியுடன் சென்றுள்ளார். அங்கு வந்த மர்ம ஆசாமி பையிலிருந்த பதினைந்தாயிரம் மட்டும் எடுத்துக்கொண்டு பையை வைத்துவிட்டு தப்பினார். பையில் இரண்டு செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டுகள் மட்டும் பத்திரமாக வைக்கப்பட்டு இருந்தது. இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.