இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பாக சாயல்குடி, கடலாடி, நரிப்பையூர், வாலாந்தரவை, சிக்கல், கீழக்கரை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து ஆடு திருடு போவதாக காவல்துறைக்கு புகார் வந்தவண்ணம் இருந்தன.

இந்நிலையில் கடலாடி, சாயல்குடி பகுதிகளில் அதிகளவில் ஆடுகள் திருடு போவதாக வந்த தகவலையடுத்து காவல்துறையினர் கடலாடி தேவர் நகர் பஸ் ஸ்டாப்பில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் இன்னோவா போன்ற சொகுசு கார்களில் வந்தவர்கள் மழைக்காக பஸ் ஸ்டாப் ஓரங்களில் நின்று கொண்டிருந்த 10த்திற்கும் மேற்பட்ட ஆடுகளை காரில் ஏற்றி சென்றது தெரியவந்துள்ளது. இதேபோல் சாயல்குடி வெள்ளாளபட்டி அருகே காரில் ஆடுகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதுகுளத்தூர் டிஎஸ்பி ராஜேஸ்குமாரிடம் கேட்டபோது, “சமீப காலமாக ஆடுகள் திருடு போவதாக வந்த தகவலையடுத்து பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் சொகுசு கார்களில் திருடுவது தெரியவந்துள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.