தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில தினங்களில் மின்தடை என்ற பேச்சுக்கே இடமிருக்காது என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''இரண்டு மாத நிலக்கரி தேவைக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரமும், நிலக்கரியும் வந்து சேராததே பிரச்சனைக்கு காரணம். மின்வெட்டு தொடர்பான புகார்களை 9498794987 என்ற சேவை எண்ணில் தெரிவித்தால் உடனடியாக தீர்த்து வைக்கப்படும். தற்பொழுது இந்த எண்ணிற்கு வரும் புகார்கள் 99 சதவிகிதம் தீர்வு காணப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் மின்தடை குறித்து மக்களிடம் தவறான கருத்துக்களைப் பரப்பி மலிவான விளம்பரத்தைத் தேடி வருகிறார். நமக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் நோக்கம்''என்றார்.