அதிமுகவில் பிளவு கிடையாது என்கிறார் தம்பிதுரை!
அதிமுகவில் பிளவு என்பது கிடையாது என்றும், அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், காலப்போக்கில் அவை சரியாகிவிடும் என்று மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வந்த இந்த இயக்கத்தை காப்பது அதிமுகவின் தொண்டர்களின் ஒவ்வொருவரின் கடமை என்பதை தான் தாங்கள் செய்து வருவதாக கூறியவர், 3ல் 2 பங்கு இல்லை என்றால் தான் பிரிந்திருப்பதாக அர்த்தம் என்றும், தேர்தல் ஆணையம் கூட அதிமுக்ஃ பிரிந்துள்ளது என்று சொல்லவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
திராவிட இயக்கத்தின் ஆட்சி தொடர்வதற்கு அண்ணா தான் காரணம் என்றும், அண்ணா வழியில் தொடர்ந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக தொடர்ந்து வருவதாக கூறினார்.
- அருள்