இன்று சென்னை நடுக்குப்பத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நாங்கள் எதிர்கட்சியாக இருந்த பொழுது அரசியல் ரீதியாக பார்க்காத சிறைகளே இல்லை என கூறியுள்ளார்.
சென்னை நடுக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்ட மீன் அங்காடியை திறந்துவைத்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில்,
இன்னும் புதிதாக 19 மீன் அங்காடிகளை அரசு புதியதாக அமைக்கவுள்ளது. ஆளுநர் ஆய்வு மற்றும் அவருடைய செயல்பாடுகளை தடுப்பது போன்றவை 7 ஆண்டு சிறை தண்டனைக்கு உரிய குற்றம் என ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது என்பது ஏற்கனவே அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளதையே தற்போது ஆளுநர் மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல் சட்டத்திற்கு உட்பட்ட போராட்டங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. திமுக ஆட்சியில் இருந்தபொழுது நாங்கள் பார்க்காத சிறையே இல்லை ஏழு முறை சிறை சென்றோம். சென்னை சென்ட்ரல் ஜெயில், திருச்சி, கடலூர், வேலூர் சிறை என நாங்கள் பார்க்காத சிறையே இல்லை அரசியல் ரீதியாக எனக்கூறினார்.