Skip to main content

ஓ.பி.எஸ். மீது வழக்குப் பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு! 

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

Theni Special court order to register  case on OPS

 

கடந்த தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், பொய்யான தகவல்களை அளித்ததாக முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய தேனி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

 

தேனி மாவட்ட தி.மு.க. இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் மிலானி என்பவர் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்தார்.

 

Theni Special court order to register  case on OPS

 

அப்படி தாக்குதல் செய்த அந்த மனுக்களில், ‘கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கடந்த 2019-ம் ஆண்டு தேனி நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் போட்டியிட்ட அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் தங்களின் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்தும், பொய்யான தகவல்களை தெரிந்தும் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் மக்களை ஏமாற்றி அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி குறிப்பிடு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் எம்.பி. ஆகிய இரண்டு பேருக்கும் எதிராக தனித்தனி புகார் மனுக்களை மிலானி தாக்கல் செய்து இருந்தார்.

 

Theni Special court order to register  case on OPS

 

இந்த மனுக்கள் மீதான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட்டு, மனுக்கள் மீது தனித்தனியாக உத்தரவுகளை பிறப்பித்தார். அதில் இந்தப் புகார்கள் மீது தேனி மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். விசாரணை அறிக்கையை வருகிற பிப்ரவரி மாதம் 7-ந் தேதி அல்லது அதற்கு முன்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் வாரண்டு இல்லாமல் கைது செய்யக்கூடாது. எதிர் மனுதாரர்கள் அரசியல் செல்வாக்கு மிக்க நபர்களாக இருப்பதால் மனுவை தாக்கல் செய்த நபருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார். இப்படி திடீரென ஓ.பி.எஸ். மற்றும் அவரது மகன் எம்.பி.ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு செய்ய தேனி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்