Skip to main content

தேனி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம்!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

theni disrict new collector appointed  tn govt

 

தேனி மாவட்டத்தில், முதல் பெண் மாவட்ட ஆட்சியராக மரியம் பல்லவி பல்தேவ் பொறுப்பேற்றுப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மரியம் பல்லவி பல்தேவ் தேனி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று மூன்று வருடம் ஆகிவிட்டதால், அவரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த மரியம் பல்லவி பல்தேவ் சென்னையில் உள்ள நில நிர்வாகக் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தமிழக அரசின் நிதித்துறையில் இணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த கிருஷ்ணன் உன்னி தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்