Skip to main content

சுஷ்மாவுக்கு நன்றி சொன்ன கனிமொழி..!

Published on 09/10/2017 | Edited on 09/10/2017
சுஷ்மாவுக்கு நன்றி சொன்ன கனிமொழி..!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் துபாயில் உயிரிழந்தார். அங்குள்ள அல் ரஷீத் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இது குறித்து மாநிலங்களவை எம்.பி.கனிமொழி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று அவர் கணேசனின் உடலை இந்தியா கொண்டுவருவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து தந்தார்.


இதற்கு நன்றி தெரிவித்த கனிமொழி, "துபாயில் இறந்த கணேசனின் உடலை இந்தியா கொண்டு வந்து, அவரது குடும்பத்தார் அவருக்கு சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள் செய்வதற்கு உதவிய மாண்புமிகு சுஷ்மா ஸ்வராஜ் அவர்களுக்கு நன்றி" என தன்  ட்விட்டரில் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
                                        
- அரவிந்த்

சார்ந்த செய்திகள்