Skip to main content

’மேல்முறையீடு செய்து கிளீயரன்ஸ் வாங்கலாம் என்று முடிவு எடுக்கிறோம்’- தங்க தமிழ்ச்செல்வன் 

Published on 05/11/2018 | Edited on 05/11/2018

 

t

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  நிலக்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 
   இக்  கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினார்.   
அதன் பின் பத்திரிகையாளர்களிடம்  பேசிய  தங்க தமிழ்செல்வன்,  


 வருகிற 11ம் தேதி இந்த மைனாரிட்டி அரசை கண்டித்து நிலக்கோட்டை தொகுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லாததை  சுட்டிக்காட்டி உண்ணாவிரத போராட்டம் நடக்க இருக்கிறது.  இந்த போராட்டம்  நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தங்கதுரை தலைமையில் தான்  நடைபெற இருக்கிறது.   இந்த  அரசு  தேர்தல் நடத்துவதற்கு  பயப்படுகிறது. தேர்தல் நடத்தமாட்டார்கள்.  பாராளுமன்ற தேர்தலுடன் தான் இந்த இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.

 

t

 

இடையில் தேர்தல் நடத்தினால் அதிமுக ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது . அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் 20 தொகுதிகளிலும் ஜெயிக்கும். ஆகையால் தான் தேர்தல் நடத்த அதிமுக பயப்படுகிறது. மேல்முறையீடு பண்ண 90 நாட்கள்  உள்ளது.  எங்களது துனை பொதுசெயலாளர் மேல்முறையீடு இல்லை என்று கூறிவிட்டார். 

 

வருகிற 9ம் தேதி சிறையில் உள்ள சின்னம்மாவை  பார்க்கப் போகிறோம்.  அப்படி  பார்த்துவிட்டு  வந்த பின்பு இது தொடர்பாக பேசி நல்ல முடிவு எடுப்போம்.  ஆனால் எங்கள் துணை பொதுசெயலாளர் சொன்னது சொன்னது தான். கூட்டணி வந்தால் ஏற்றுக் கொள்வோம் வரவேற்போம். கூட்டணி வரவில்லை என்றால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து நின்று 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். 18 தொகுதிகளில் யார் யார் நின்று ஜெயித்தார்களோ அவர்கள் வேட்பாளர்கள். கடைசி நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது எங்கள் வேட்புமனு நிராகரிக்கபட கூடாது அதை சரிசெய்யத் தான் ஒரு மேல்முறையீடு செய்து கிளீயரன்ஸ் வாங்கலாம் என்று முடிவு எடுக்கிறோம். 

 

உறுதியாக 18 சட்டமன்ற உறுப்பினர்களும் அதே தொகுதியில் போட்டியிடுவோம். ஆளுநரை பார்த்து மனு கொடுத்தற்காக இவ்வளவு பெரிய தண்டணை வழங்கியுள்ளனர். நோ பார்முலா மக்கள் சந்திப்பு தொண்டர்களின் பலம் இரண்டை வைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஜெயித்து வருவோம் என தெரிவித்தார்.
    இக் கூட்டத்துக்கு தங்கதுரை தலைமை தாங்கினார். பொருளாளர் வைகைபாலன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தார்.   இறுதியாக நிலக்கோட்டை நகரசெயலார் பாலமுருகன் வரவேற்றார். அது போல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொறுப்பாளர்களும் தொண்டர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்