கரூர் மாவட்டம், கருப்பூர் மாயனூர் சங்கரன்மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பிரகாஷ் நடராஜன், ஒரு பொறியாளர். 2017- ஆம் ஆண்டு, தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்குச் சென்றார். 2018- ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் சிக்கி, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே அவர் தற்கொலை செய்துக் கொண்டதாகத் தகவல் வந்தது.
இதையடுத்து கரூர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள், இது குறித்த தகவலை வைகோ கவனத்திற்குக் கொண்டு சென்றார். உடனே, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை மின்அஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்டார், வைகோ எம்.பி. அமைச்சகத்தில் இருந்து தாய்லாந்து தூதரகத்தைத் தொடர்பு கொண்டனர்.
அதற்கு விளக்கம் அளித்து, பாங்காக்கில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி அனுப்பி உள்ள தகவல்: "இறந்தவருடைய குடும்பத்தினர், கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளருடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். உடலை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான ஆவணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஏசியா ஒன் என்ற பொருள் போக்குவரத்துத் துறையினர், அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். அதற்கான செலவுகளைக் குடும்பத்தினர் ஏற்க இயலாத நிலையைக் கருதி, இந்திய சமூக நல நிதியில் இருந்து ஈடுகட்ட, தூதர் ஒப்புதல் தந்துள்ளார். அடுத்த 3 அல்லது 4 நாட்களில் உடல் சென்னைக்கு வந்து சேரும். அங்கிருந்து, கரூருக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தகவலை வைகோவுக்கு தெரிவித்துள்ளார், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.