தேமுதிக மூன்றாம் கட்ட அமைப்புத்தேர்தல் :
விஜயகாந்த் அறிவிப்பு
தேசிய முற்போக்கு திராவிட கழகம் அமைப்பு தேர்தல் குறித்து கழக தலைவர் விஜயகாந்த்,
’’தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், 2017 கழக அமைப்பு தேர்தல் மூன்றாம் கட்டமாக 03.09.2017 தேதி முதல் 07.09.2017 வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட கழக அமைப்புகளுக்கு தேர்தல் கீழ்க்கண்டவாறு தமிழ்நாடு முழுவதும் கட்சியின் அமைப்பு தேர்தல் நடைபெறும்.
மூன்றாம் கட்ட அமைப்பு தேர்தல்:
03.09.2017
ஞாயிற்றுக்கிழமை
முதல்
07.09.2017
வியாழக்கிழமை வரை
(மொத்த 5 நாட்கள்) தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட கழகத்திற்கும் கழக அமைப்பு தேர்தல் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படும் பதவிகள், மாவட்ட கழக செயலாளர், அவைத்தலைவர், பொருளாளர், நான்கு துணை செயலாளர்கள், இரண்டு செயற்குழு உறுப்பினர்கள், ஐந்து பொதுக்குழு உறுப்பினர்கள் என தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நான்காம் கட்ட கழக அமைப்பு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.’’என்று அறிவித்துள்ளார்.