![STRIKE](http://image.nakkheeran.in/cdn/farfuture/rxOXI4vFKtQS-lPETUAVJXNfk2Sx2lsspD4qH-QXSdE/1536495334/sites/default/files/inline-images/CscmPVbUIAAsL7X.jpg)
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெறவிருக்கும் பந்த்திற்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் கடைகள் அடைக்கப்படும் என வணிகர்கள் அறிவித்துள்ளனர்.
நாட்டில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றி அமைத்து கொள்ளலாம் என மத்திய அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. இதனையடுத்து வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, மேலும் பல்வேறு தொழில்களும், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த விலை உயர்வை கண்டித்து நாட்டில் பல்வேறு தரப்பினரும் விலை உயர்வை குறைக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தினர். ஆனால் மத்திய அரசு பிடிவாதமாக விலையை குறைக்க மறுத்துவிட்டது. இந்நிலையில் தேசிய காங்கிரஸ் சார்பில் பல்வேறு கட்சியினரும் 10-ம் தேதி நாளைய தினம் பந்த் அறிவித்துள்ளனர்.
இந்த பந்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஆதரவு தொிவித்துள்ளது. இதனையடுத்து நாளைய தினம் திருவாருர் மாவட்டத்தில் 10-ஆயிரம் கடைகள் அடைக்கப்படும் என மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தொிவித்துள்ளார். மேலும் வரும் 28-ம் தேதி ஜிஎஸ்டி, ஆன்லைன் வர்ததக நிறுவுனங்களை தடை செய்ய வேண்டும் தமிழக வர்த்தகர்களை பாதுக்க வேண்டும் என வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது அதற்கு அனைத்து கட்சியினரும் வர்த்தகர்களும் ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்தார்.