Skip to main content

பிளாஸ்டிக் பாட்டிலுடன் போனால் பத்து ரூபாய் பணம் கட்டவேண்டும்: நீலகிரி மாவட்ட ஆட்சியர் புது உத்தரவு

Published on 12/08/2017 | Edited on 12/08/2017
பிளாஸ்டிக் பாட்டிலுடன் போனால் பத்து ரூபாய் பணம் கட்டவேண்டும்: நீலகிரி மாவட்ட ஆட்சியர் புது உத்தரவு

இயற்கை மற்றும் சுற்றுச் சூழலை கேடுதுவரும் பிளாஸ்டிக் கேரி பை, டம்ளர் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த நீலகிரி மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், தங்களுடன் அதிகளவு பிளாஸ்டிக் கேரி பை மற்றும் பாட்டில்களை கொண்டுவந்து மலைபகுதியில் அங்காங்கே போட்டுவிடுகின்றனர்.

இதை கட்டுப்படுத்தும் நோக்கில்,  மாவட்ட நிர்வாகம் புதிய முயற்சியை அறிமுகம் செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லத்தில் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த இரு இடங்களில் பயணிகள் செல்லும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், மகளிர் குழு உறுப்பினர்கள் அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் உள்ள பிளாஸ்டிக் பாட்டில், தம்ளர்கள், பிளாஸ்டிக் பைகள் என ஓவொரு பொருளிலும் ஒரு ஸ்டிக்கரை ஒட்டி அந்த பயணியிடம் இருந்து ஒரு ஸ்டிக்கருக்கு பது ரூபாய் வீதம் பணம் வசூலித்துக்கொள்வார்கள்.

பூங்காவின் உள்ளே செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களின் பொழுது போக்கை முடித்து, மீண்டும் வெளியே வரும் போது தங்களிடம் உள்ள ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கேரியர் பைகளை மகளிர் குழுவினரிடம் ஒப்படைதுவிட்டு தாங்கள் செலுத்திய 10 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு வேளை அவர்கள் அந்த பாட்டிலை காண்பிக்காமலே சென்றுவிட்டால், அவர்கள் பூங்கா பகுதியில் பாட்டிலை வீசியெறிந்துவிட்டு வந்துள்ளனர் என்பது தெரிந்துவிடும். இதைக்கொண்டு அங்கெ கிடக்கும் பொருட்களை எளிதில் கண்டுபிடிக்கவும் வசதியாக இருக்கும்.

பிளாஸ்டி பொருட்களை போது இடங்களில் போடக்கூடாது என்ற விழிப்புணர்வையும், கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தும் இந்த இத்திட்டத்தை ஊட்டி படகு இல்லத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

அரசு தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லத்தில் இப்பணியை மேற்கொள்ளவுள்ள மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அதற்கான உத்தரவையும் வழங்கினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளால் குவியும் பிளாஸ்டிக் பாட்டில்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த வெள்ளோட்ட அடிப்படையில் இம்முயற்சியை எடுத்துள்ளோம். இதற்க்கு சுற்றுலா பயணிகள் ஒத்துழைக்க வேண்டும். அடுத்த கட்டமாக மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும்,'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்