Published on 20/03/2020 | Edited on 20/03/2020
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேவாலயங்கள் கோயில்கள், மசூதிகள், மக்கள் கூட்டத்தை தவிர்க்கவும் வழிபாட்டுக்காக கோயிலுக்கு மக்கள் வர வேண்டாம் என்றும் அரசு நிர்வாகம் தொடர்ந்து அறிவித்து வருகிறது.
இந்த நிலையில் ஈரோட்டில் இன்று மிகவும் பிரசித்தி பெற்ற மசூதி, தேவாலயம் மற்றும் கோயில் என ஈரோட்டில் மொத்தம் 16 கோயில்கள் கதவுகள் பூட்டப்பட்டது. இங்கு வந்த ஒவ்வொரு மதத்தினரும் வெளியே நின்று அமைதியாக அவர்களது கடவுள் வழிபாட்டை செய்து விட்டு போனார்கள். இந்த வைரஸ் நோய் தாக்கி விடுமோ என்கிற பயத்தோடு தங்களின் இஷ்ட தெய்வங்களை மனமுருகி வேண்ட முடியவில்லையே தெய்வங்களையே பார்க்கமுடியாமல் சென்றனர்.