மதுரை மேலூரில் 62 உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய வெள்ளலூர்நாட்டில் உள்ள கோவில் ஒன்றை அறநிலையத்துறை எடுத்துக்கொள்ள இருப்பதாக வெளியான தகவலை அடுத்து 62 கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் ஒன்று சேர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். மேலும் அறநிலையதுறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிர்த்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று அறநிலையத்துறையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மேலூரில் வெள்ளலூர்நாடு எனப்படும் 62 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் ஏழைகாத்தம்மன், வல்லடிக்காரர் கோவில் இருக்கிறது. அந்த கிராம மக்களே சொந்த செலவில் வரி செலுத்தி கோயிலை காட்டியதோடு வருடா வருடம் பிரமாண்டமாக திருவிழாவும் நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் மட்டுமின்றி தமிழக அளவிலும் இந்த திருவிழாவானது மிகவும் பிரபலமான திருவிழா ஆகும்.
இந்நிலையில் இந்த கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்ல இருப்பதாய் அறிந்த அப்பகுதி மக்கள் பெருவாரியாக ஒன்றிணைந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கோவில் ஊர் மக்களுக்குத்தான் சொந்தம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு விடமாட்டோம் என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையறிந்து அறநிலையத்துறை அதிகாரி விஜயன் மற்றும் ஏடிஎஸ்பி வனிதா உள்ளிட்டோர் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதனை ஏற்காத மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மீறி கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் மாவட்ட ஆட்சியர் மற்றும் அறநிலையத்துறையிடம் மனு கொடுக்க பெருவாரியாக இருசக்கர வாகனத்தில் வந்து போராட்டம் செய்வோம் என எச்சரித்துள்ளனர். தற்போது வரை மக்கள் இடத்தை விட்டு கலையாததால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.