Skip to main content

ஜெ. மற்றும் எம்.ஜி.ஆருக்கு 12 ஏக்கரில் கோவில்... இன்று திறப்பு!

Published on 30/01/2021 | Edited on 30/01/2021

 

temple

 

மதுரை  மாவட்டம் டி.குன்னத்தூரில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆருக்கு கட்டப்பட்ட கோவிலை தமிழக முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்.

 

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னெடுப்பில் கட்டப்பட்டுள்ள கோவில், இன்று (30.01.2021) திறக்கப்பட இருக்கிறது. மொத்தம் 12 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோவிலில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் இருவருக்கும் 7 அடியில் வெண்கலச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்தக் கோவில் திறப்பு விழாவிற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிமுக நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

இந்த நிகழ்வில் யாக சாலை, கோ பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் நலிவுற்ற அதிமுக தொண்டர்கள் 234 பேருக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் நிகழ்வின் முடிவில் முதல்வரும், துணை முதல்வரும் உரையாற்ற உள்ளனர்.  

 

சார்ந்த செய்திகள்